June 15, 2012

2 States - ஒரு பார்வை


“ Marriages are made in heaven “. இந்த கருத்தை ஆதரிப்பவரா நீங்கள் ? Chetan bhagat  எழுதிய  “ Two states; The Story Of My Marriage “ புத்தகத்தை ஒரு முறை படித்து பாருங்கள். உங்கள் கருத்து மாற நேரிடலாம். சரி. அதெல்லாம் இருக்கட்டும். இந்த புத்தகம் எதை பற்றியது ? கேள்வி எழுகிறதா ? மேற்கொண்டு தொடருங்கள்.



 புத்தகப் பெயர் : 2 States - The Story Of My Marriage   
           ஆசிரியர் : சேத்தன் பகத்
             விலை : ரூ.140


இந்த புத்தகத்தை பற்றி சேத்தன் பகத் அவர்களின் முன்னுரையைப் நீங்களே படியுங்கள். “ உலகம் முழுவதும் நிச்சயிக்கப்படும் காதல் திருமணங்கள் எளிதான விதிகளை உடையவை. ஒரு ஆண் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். அந்த பெண்ணும் அந்த ஆணைக் காதலிக்கிறாள். முடிவில் இருவரும் திருமணம் செய்துக் கொள்கின்றனர்

ஆனால் இந்தியாவில் இன்னும் சில படிகள் இருக்கின்றன. இங்கு ஒரு ஆண் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். அந்த பெண்ணும் அந்த ஆணைக் காதலிக்கிறாள். பெண்ணின் குடும்பத்திற்கும் பையனைப் பிடிக்க வேண்டும். பையனின் குடும்பத்திற்கும் பெண்ணைப் பிடிக்க வேண்டும். பெண்ணின் குடும்பத்திற்கு பையனின் குடும்பத்தைப் பிடிக்க வேண்டும். பையனின் குடும்பத்திற்கும் பெண்ணின் குடும்பத்தைப் பிடித்திருக்க வேண்டும். அதுவரை அந்த பெண்ணும் பையனும் காதலித்துக் கொண்டிருக்க வேண்டும். அதன் பிறகுதான் அந்த திருமணம் நடக்க முடியும்.
க்ரிஷ் , அனன்யா இருவேறு மாநிலங்களை சேர்ந்த இந்த இருவரும் காதல் கொள்கின்றனர். திருமணம் செய்யவும் முடிவு செய்கின்றனர். வழக்கம் போல் அவர்களது பெற்றோரும் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் பெற்றோரைப் புறக்கணித்து திருமணம் செய்ய எத்தனிக்கவில்லை. மாறாக அவர்கள் பெற்றோரின் சம்மதத்திற்காக போராடுகின்றனர். இதில் அவர்கள் வெற்றிப் பெற்றார்களா ? “ – கதையைப் பற்றிய சேத்தன் பகத்தின் சுருக்க உரையின் தமிழாக்கமே இது.
 உண்மையில் இது கதையல்ல. நிஜம். இந்த கதையின் ஆசிரியரான சேத்தன் பகத்தின் நிஜ வாழ்வு சம்பவங்களின் தொகுப்பே இதுசரி கதைக்கு வருவோம்.

வழக்கமான சேத்தன் பகத்தின் கதைகளைப் போலவே இதுவும் ஒருவர் தன் கதையை உரைப்பதாகவே அமைந்துள்ளது. கதையின் நாயகன் க்ரிஷ் டெல்லியில் வசிக்கும் பஞ்சாபி. தனது மேற்படிப்புக்காக அகமதாபாத்   ஐஐஎம்-ல் சேருகிறான். சேர்ந்த முதல் நாளே மெஸ்ஸில் ஒரு அழகான தென்னிந்திய பெண்ணை சந்திக்கிறான். அவளுடன் நட்புக் கொள்கிறான். நட்பு காதலாக மாறுகிறது. எல்லையையும் தாண்டுகின்றனர் ( புரிந்திருக்கும் என நினைக்கிறேன் ! ) . திருமணம் செய்ய தீர்மானிக்கின்றனர்

ஆனால் ஒரு பிரச்சினை. க்ரிஷ் பஞ்சாபை சேர்ந்தவன். அனன்யா தமிழ் நாட்டை சேர்ந்தவள். இருவரும் மொழியால் பிரிக்கப்பட்டிருந்தாலும் மனதால் இணைந்திருந்தனர். அவர்கள் இருவரும் தங்கள் பெற்றோரை சம்மதிக்க வைக்க பாடுபடுவதே கதை

தனது எளிதான ஆங்கில நடையால் அனைவரையும் கவர்ந்த சேத்தன் இந்த புத்தகத்திலும் அசத்தியிருக்கிறார். ஒவ்வொரு சம்பவத்தையும் அவர் விவரிக்கும் பாணி நம்மை கதைக்குள்ளே இட்டு செல்கிறது. அங்கங்கே அவர் வைக்கும் காமெடிபஞ்ச்கள் வயிறை வலிக்க வைக்கின்றன. என்னதான் அவர் சில இடங்களில் தமிழ் கலாச்சாரத்தை சாடியிருந்தாலும் தமிழ்நாட்டு மருமகன் என்பதால் மன்னித்து விடலாம். இந்த புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். பல விஷயங்களை அறிந்துக் கொள்ளலாம். நீங்கள் சிரித்து மகிழப்போவது நிச்சயம்

பி.கு 
1.ஆன்லைனில் வாங்கினால் விலை மலிவாக கிடைக்கிறது.
2. இந்த பதிவிற்கு சிறந்த கமெண்ட் அளிப்பவர்களுக்கு ஒரு இ-புக் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.


2 comments:

  1. என்னது காந்தி செத்துட்டாரா.... அப்படித்தான் இருக்கிறது இந்தப்பதிவு. 2009ல் வெளியான ஒரு மொக்கை ஆங்கில நாவலுக்கு 2012 விமர்சனம் ஏன். தயவு செய்து 2011ல் வெளியான Revolution 2020 க்கு இப்படி ஒரு பதிவு போடாதீர்.... பரிசு எனக்குத்தானே... எங்கே என் E-book

    ReplyDelete
    Replies
    1. சாரி மிஸ்டர் பாலாஜி! நான் ஒரு அரை குறை கல்லூரி மாணவன்... இப்பொழுதுதான் பதிவுகள் எழுத தொடங்கியுள்ளேன். கொஞ்சம் மொக்கையா இருக்கோ! சரி... இனிமேல் திருத்திக் கொள்ள முயலுகிறேன். அப்புறம் இ-புக் வேண்டும் என்றால் உங்கள் மெயில் ஐடியை பின்னூட்டமிடவும்........

      Delete