June 24, 2012

உன் கல்லறையில் எச்சில் துப்புகிறேன் ( I SPIT ON YOUR GRAVE ) - ஒரு பாதிப்பு-


” ஒரு ஓவியன். ஒரு காட்சியைப் பார்க்கிறான். அந்த காட்சியை அப்படியே வரைவது ஓவியம் அல்ல. அந்த காட்சி அவன் மனதில் எழுப்பிய எண்ணங்களின் பிரதிபலிப்பாகவே அவன் வரையும் ஓவியம் இருக்க வேண்டும் “ – பிக்காஸோ ( உலகப் புகழ் பெற்ற ஓவியர் ).

இந்த பதிவானது நான் இன்று பார்த்த ஒரு ஹாலிவுட் படத்தைப் பற்றியது. மேலே நான் மேற்கோள் காட்டியிருக்கும் பிக்காஸோவின் வரிகளை மீண்டும் வாசியுங்கள். அது ஓவியத்திற்கு மட்டுமல்ல. திரைப்படத்திற்கும்தான்.
ஆகவே நான் எழுதியிருப்பது விமர்சனம் அல்ல. அந்த படத்தை பார்த்ததினால் என் மனதில் ஏற்பட்ட சிந்தனைகளின் பிரதிபலிப்பே இந்த பதிவு.

சரி. பீடிகை போதும். இந்த படம் த்ரில்லர் அல்லது ஹாரர் வகையை சேர்ந்தது. அதனால் மென்மையான, மிகவும் இளகிய மனம் படைத்தவர்கள் தவிர்ப்பது நல்லது ( இந்த பதிவை அல்ல….! )
படத்தின் கதை சுருக்கம்: ஜெனிஃபர் ஹில்ஸ். ஒரு எழுத்தாளர். தனது இரண்டாவது நாவலை எழுதுவதற்கு ஒரு அமைதியான இடத்தை தேடிப் போகிறாள். அங்கு காஸ் ஸ்டேஷனில் வேலை பார்க்கும் சிலர், மற்றும் ஒரு போலீஸ் ஆபிசர் ஆகியவர்களால் கற்பழிக்கப்படுகிறாள். பாட்டிலையும் துப்பாக்கியையும் ஃபெல்லேஷியொ (fellatio) செய்ய நிர்பந்திக்கப்படுகிறாள். அது என்ன வார்த்தை ஃபெல்லோஷியொ என்பவர்கள் ஒரு முறை ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரியை புரட்டவும். தனக்கு ஏற்பட்ட இந்த கொடுமைக்காக அந்த காம வெறியர்களை கொலை செய்கிறாள். இதுதான் கதை.


இந்த படத்தை மதியம் பார்த்ததால் பிழைத்தேன். மிகவும் பயங்கரமாகவே இருந்தது. தனியாக மாட்டிக் கொண்ட பெண்ணிடம் தவறாக நடந்துக் கொள்ளும் நமது ஆண் வர்க்கத்திற்கு இந்த படம் ஒரு அபாய மணி. ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தையே சாடுகிறேன் என்று யாரும் கோபம் கொள்ள வேண்டாம்.தனிமையும், தப்பு செய்ய ஒரு சந்தர்ப்பமும் கிடைக்காதவரை நீங்களும் நானும் உத்தமர்கள்தான் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

 படத்தின் டைரக்டர் ஒரு மிகச் சிறந்த கற்பனைவாதி என்பதை படத்தில் அந்த பெண் கொலை செய்ய வித்தியாசமான வழிகளை கையாள்வதில் தெரிகிறது!.

 1978-ஆம் ஆண்டு வெளி வந்த இந்த படம் மீண்டும் 2010-ல் புதிதாக எடுக்கப்பட்டு வெளியாகியது. எனினும் இது பல நெகடிவ் விமர்சனங்களையே பெற்றது. புகழ்பெற்ற அழுகிய தக்காளிகள் தளம் படத்தை காறித் துப்பாத குறை. இருப்பினும் அழுத்தமான காட்சிகள் மற்றும் எதிர்பாராத திகில் திருப்பங்களால் மனம் கனமாவதை உணர முடிகிறது.

No comments:

Post a Comment