August 03, 2012

பயங்கள் பற்றிய தகவலும் அதற்கு தீர்வும் தரும் இணையதளம்



 
உலகில் எந்த விஷயத்திற்கும் பயப்படாமல் இருக்கும் ஒருவரையாவது கண்டு இருக்கிறீர்களா? நிச்சயமாக இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பயம் இருக்கும். சிலருக்கு பேயைக் காணாமலே பயம்; சிலருக்கு நாயைக் கண்டால் பயம்; பலருக்கு மனைவியை நினைத்தாலே பயம். இப்படி பயமானது பல வகைப்படுகிறது.

பயம் ஒரு மனிதனை தடுமாற செய்கிறது. அது மட்டுமா? பயம் இன்னும் ஏகப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பயம். ஏதாவது ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பார்த்து அச்சம் கொள்வதை ஆங்கிலத்தில் ஃபோபியா என்பர். உதாரணத்திற்கு நீங்கள் சிலந்திகளை பார்த்து பயந்தால் அதற்கு பெயர்- Arachnophobia. இப்படி ஒவ்வொரு பயத்திற்கும் ஆங்கிலத்தில் ஒரு பெயர் வைத்துள்ளார்கள். ஆனால் அதை எங்கே போய் தேடுவது? அதற்குத்தான் இந்த பதிவு.


வழக்கம் போல் ஒரு வேலையும் இல்லாமல்நெட்டில் வலம் வரும் போதுதான் இந்த தளத்தை கண்டேன். தளத்தின் பெயர் Common-phobias என்பதாகும். இந்த தளமானது ஆங்கில எழுத்துக்கள் A முதல் Z வரை உள்ள அனைத்து விதமான பயங்களையும் பற்றியும் மிக தெளிவான விளக்கங்களை கொண்டிருக்கிறது.


அது மட்டுமல்ல.. உங்கள் பயத்திற்கான அறிகுறிகள் என்ன? அந்த பயத்தை நீக்கும் வழிமுறைகள் என்னென்ன? மற்றும் இன்னும் பிற சுவையான பயனுள்ள தகவல்களையும் கொண்டுள்ளது. பார்க்க வேண்டிய தளம். அந்த தளத்தின் முகவரி…. கொஞ்சம் பொறுங்கள். அதற்கு முன்னர் சுவாரசியமான விஷயங்கள் சிலவற்றை மேய்ந்து விடலாம்.


பிரபலங்கள் சிலரும் அவர்களின் பயமும்:
·        Ataxophobia – இந்த பயம் உள்ளவர்கள் தங்களை சுற்றி உள்ள அனைத்தும் ஒழுங்கான முறையில் அடுக்கப்பட்டிருக்க வேண்டும் என விரும்புவர். கலைந்து கிடந்தால் வெறுப்பிற்குள்ளாவர். இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு பிரபலம் இங்கிலாந்தின் பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம்.

·        Chiclephobia – இந்த பயமானது சற்று வேடிக்கையானது. சுவிங்கம் தெரியுமல்லவா? அதை பார்த்து பயப்படுவதைதான் இப்படி அழைக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர் உலகப்புகழ் பெற்ற பேச்சாளர் ஓப்ரா வின்ஃப்ரே.
சரி. அந்த தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்குங்கள். முடிந்தால் மற்றொரு தருணத்தில் சந்திப்போம்…….. 

No comments:

Post a Comment