February 04, 2012

மாறுபட்ட சிந்தனை-1


 மாற்றம். ”நமக்கு ஒரு மாற்றம் தேவைஎன்ற கருத்தை வலியுறுத்திதான் அமெரிக்காவில் ஆட்சியை பிடித்தார் ஒபாமா. இன்றைய உலகில் வெற்றிப் பெற மாற்றம் என்பது ஒரு அத்தியாவசியமான தேவை. அது சிந்தனையிலும் கூடத்தான். மாறுபட்ட சிந்தனை இருந்தால் ஒருவரால் உலகையே மாற்றி அமைக்க முடியும். அதை பற்றியே இந்த பதிவு.

மாறுபட்ட சிந்தனை என்றால் என்ன?

தினம் தினம் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் பல பல. ஆனால் நம் கண்களுக்கு பிரச்சினைகள் தெரிந்த அளவுக்கு அவற்றிற்கான தீர்வுகள் தென்படுவதில்லை. இங்குதான் நமக்கு மாறுபட்ட சிந்தனையின் தேவை புலப்படுகிறது. எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு தேவையா? சராசரியாக சிந்திப்பதை நிறுத்துங்கள். வித்தியாசமாக சிந்தியுங்கள். நினைவில் கொள்ளுங்கள். வித்தியாசமாக….

உங்கள் பிரச்சினைக்கான தீர்வை வேறொரு மனிதனின் கோணத்தில் இருந்து தேடுங்கள். இதைத்தான் ஆங்கிலத்தில் come beyond the circle என்பர். அதாவது உங்கள் பிரச்சினையை விட்டு வெளியே வந்து சிந்தியுங்கள்உங்கள் சிந்தனை வேடிக்கையாக இருக்கலாம். ஏன் முட்டாள்தனமாக கூட தோன்றலாம். எனினும் உங்களுக்கு தேவை தீர்வுதானே…. அதை தரக்கூடிய வழிகளை தேடுங்கள்.

மேற்கொண்டு செல்வதற்கு முன் இதைப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம்:
Lateral thinking. இந்த சொல்லை முதன்முதலில் உலகிற்கு
அறிமுகப்படுத்தியவர்  Edward de bono என்பவர். இவர் மனவியலில் பி.எச்டி பட்டம் பெற்றவர். தனது வித்தியாசமான சிந்தனைகளால் உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்.
மேலும் பல தகவல்கள் அடுத்த பதிவில்….

பொன்மொழி:
ஒருவன் தன்னையே முழுமையாக அறிந்துக்கொள்ளும் வரை அவன் வாழ்க்கை முழுமை அடைவதில்லை

No comments:

Post a Comment