February 04, 2012

கல்வியாளர்களே கவனியுங்கள்...


இது மாணவர்களுக்காக…..  நாம் அனைவரும் கற்கும் கல்வி அடிப்படையில் மிகவும் தவறான முறை ஆகும். யாரும் கல்வி கற்பதை அறிவை வளர்ப்பதாக நினைத்து கொள்வதில்லை. எல்லாமே இங்கே ஒரு லாப நஷ்ட கணக்குதான்.தற்பொழுது நடைமுறையில் உள்ள பாடத்திட்டம் மாணவர்களை ஒரு மனப்பாடம் செய்யும் இயந்திரமாகவே மாற்றிவிட்டது. என்னை பொருத்தவரை இன்று கல்வி கற்கும் மாணவர்கள் அனைவரும் திட்டமிட்டு முட்டளாக்கப்பட்டவர்கள்.இந்த அவசர உலகில் யாரும் நிதானமாக இதை பற்றி ஒரு நொடி கூட யோசிக்க தயாராய் இல்லை என்பது ஒரு வெட்கக்கேடான விஷயம்.ஒவ்வொருவரும் குழந்தைகளின்
எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும்.அனைவரும்நண்பன்திரைப்படம் பார்த்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.அதில் வரும்கொசக்சி பசுப்புகழ்என்னும் கதாப்பாத்திரம் மிக நன்றாக உருவாக்கப்பட்டிருக்கும்.



ஒருவன் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் எடுத்தால் மட்டும் போதாது.”ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாதுஎன்பதை நினைவில் கொள்ள வேண்டும்.இன்று பள்ளியிலும் கல்லூரியிலும் பயிலும் மாணவர்கள் அனைவரும் நல்ல மதிப்பெண் எடுத்தால் மட்டுமே சிறந்த வேலை கிடைக்கும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.இது ஒவ்வொரு மாணவனின் மனதிலும் மிகுந்த சுமையும் அழுத்தத்தையும் ஏற்படுத்திவிட்டது. விளைவு! தற்கொலைப் பட்டியலில் இந்தியா முன்னணி இடத்தை பிடித்துள்ளது.



 நோபல் பரிசு பெற்ற பிறப்பால் இந்தியரான திரு.வெங்கட்ராம ராமகிருஷ்ணன் அவர்கள் கூறினார்இந்தியாவில் அடிப்படை அறிவியலுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லைஎன்று. அது மிக மிக சரியான கூற்று.
இந்த நிலைமை மாறவேண்டும் என்பதே எனது விருப்பமாகும்




பொன்மொழி:
 ”இந்த உலகிலேயெ செய்ய மிகக்கடினமான ஒரு விஷயம் நாம் செய்த தவற்றை ஒப்பு கொள்வதுதான்”.

No comments:

Post a Comment